இந்தியாவின் பல்வேறு நகரங்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் நடந்த சிறப்பு கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாசேத்திரா அரங்கத்தில் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இதில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் பிரசித்தி பெற்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 10 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில், கைவினை பொருட்கள், உள்பட அந்தந்த மாநிலங்களில் பிரசித்தி பெற்ற உணவு வகைகள் மற்றும் காஷ்மீர் கம்பளி வகைகள், உத்தர பிரதேச பர்னிச்சர் வகைகள் என 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் நேரடியாக பொருட்களை வாங்கி சென்றனர். பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் கண்காட்சியில் நடைபெற்றது.
Discussion about this post