உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இலவச லட்டு வழங்கும் திட்டத்தின் மூலம் 51 நாட்களில் 10 லட்சம் லட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் இலவசமாக லட்டு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதில் இலவச லட்டு வழங்குவதற்காக தனியாக இயந்திரம் மற்றும் பிரத்யேக அறை ஏற்படுத்தப்பட்டு,இயந்திரம் மூலமாக லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலிக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிதியிலிருந்து 30 கிராம் மதிப்புள்ள இலவச லட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இலவச லட்டுகள் 51 நாட்களில் சுமார் 10 லட்சம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post