நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 2 மாணவிகள் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்வாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், மங்குழி பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற கூலித் தொழிலாளியின் மகள்கள் ஷப்னாஷெரின், ஷம்னாஷெரின். இவர்கள் ஆறாம் வகுப்பிலிருந்தே பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்று பல பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், ஜனவரி 21ஆம் தேதி ஒடிசாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். போட்டிகளில் கலந்து கொள்ள அரசு நிதியுதவி வழங்கி வருவதாகவும், மேலும், அரசு கூடுதல் நிதி வழங்கித் தங்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் மாணவிகள் கேட்டுக் கொண்டனர்.
Discussion about this post