கவிஞர் வைரமுத்துவிற்கு தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவுர டாக்டர் பட்டம் வழங்கவிருப்பதாக வெளியான அறிவிப்பு ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.
எழுத்தாளரும், கவிஞருமான வைரமுத்துவிற்கு தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவுர டாக்டர் பட்டம் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த பட்டத்தை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கி கௌரவிப்பார் என்றும் கூறப்பட்டது. இதற்கு பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், தான் உட்பட 9 பெண்கள் வைரமுத்துவால் பாலியல் தொல்லைக்கு ஆளான நிலையில் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது நியாமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதே போல இந்து அமைப்புகள் கூட கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இந்த நிலையில், பல்கலைகழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புது அழைப்பிதழில், வைரமுத்துவின் பெயர் இடம் பெறவில்லை. சின்மயியின் ட்விட்டர் பதிவின் காரணமாக வைரமுத்துவிற்கு வழங்கப்பட இருந்த டாக்டர் பட்டம் பறிபோனதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது. ME TOO என்ற ஹேஷ்டேக் மூலம் ஏற்கனவே பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post