10 வயதுடைய ஸ்டீவ் என்ற சிறுவன் பாம்பு புகைப்படம் கொண்ட சட்டையை அறிந்திருந்ததால் விமானத்தில் ஏறும் அனுமதியை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
நியூசிலாந்தை சேர்ந்தவர் லுகாஸ். இவரது மகன் தான் ஸ்டீவ். இருவரும் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் அவர்களின் பாட்டியை பார்க்க சென்றுள்ளனர்.ஆனால் விமான நிலையத்தில் ஸ்டீவ் பாம்பு புகைப்படம் கொண்ட டி ஷர்ட்டை அணிந்து இருந்ததால், விமானத்தில் இந்த டீ ஷர்ட்டை அணிந்து கொண்டு ஏற கூடாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த பாம்பு புகைப்படத்தை பார்த்தால் மற்ற பயணிகள் பயப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். உடனே சமயோஜிதமாக யோசித்து ஸ்டீவின் அம்மா டீ-சர்ட்டை உள்பக்க புறமாக மாற்றி அணிவித்து விமானத்தில் ஏற அனுமதி வாங்கி உள்ளார்.
பின்பு தென்னாபிரிக்கா வந்தவுடன் லூகாஸ் இதுகுறித்து விமான நிறுவனத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார். இதனை பார்த்த அந்நிறுவனம் இதைப் பற்றி எங்களிடம் கூறியதற்கு நன்றி.நாங்கள் அந்த அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் தெரிவித்த உடன் முழுமையான விளக்கம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post