உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கர்நாடகாவின் முன்னாள் ஆளுநருமான எஸ்.மோகன், உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 89. 1954 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியை தொடங்கிய எஸ்.மோகன், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
1990ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் எஸ்.மோகன் பணியாற்றியுள்ளார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.மோகன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.
Discussion about this post