குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்
பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த மதச்சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு அண்மையில் சட்டம் இயற்றியது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து மும்பையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மும்பை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். நீளமான தேசியக் கொடியை கொண்டு கையில் ஏந்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
Discussion about this post