இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திமுகவிற்கு போடப்படும் ஓட்டுக்கள் அனைத்தும் செல்லாத ஓட்டுகளாகிவிட்டன என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் 2ம் கட்ட தேர்தலுக்காக, வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்கள், மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என விமர்சனம் செய்தார்.
Discussion about this post