ஆபாசப் படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்த 65 பேர் அடங்கிய பட்டியலைச் சென்னை மற்றும் மேற்கு மண்டலக் காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், ஆபாசப் படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்தவர்களின் பட்டியலைக் கொண்டு, காவல்துறை கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 2 பேரைக் கைது செய்துள்ள காவல்துறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை தொடரும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பகிர்ந்தது மற்றும் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக 40 பேர் அடங்கிய பட்டியலைச் சென்னை மாநகரக் காவல்துறைக்கும், 25 பேர் அடங்கிய பட்டியலை மேற்கு மண்டலக் காவல்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளதாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
Discussion about this post