காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்திருப்பதால், மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 268 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118 புள்ளி 79 அடியாகவும், நீர் இருப்பு 91 புள்ளி 554 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக, வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Discussion about this post