கடலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான காமாட்சி அம்மன் விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், ஆள்பேட்டை சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட காமாட்சி அம்மன் விளக்குகளை பறிமுதல் செய்தனர்.
Discussion about this post