நாட்டிலேயே முதன் முறையாக திருநங்கைகளுக்கான முதல் பல்கலைகழகம் உத்தரபிரதேசத்தில் உருவாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பசில்நகர் மண்டலத்தில், நாட்டின் முதலாவது திருநங்கை பல்கலைக்கழகம் உருவாகிறது. அகில இந்திய திருநங்கை கல்வி சேவை அறக்கட்டளை என்ற அமைப்பு இதை கட்டி வருகிறது. இங்கு திருநங்கைகள், முதலாம் வகுப்பில் இருந்து முதுகலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, பிஎச்.டி. பட்டமும் பெற முடியும். இது குறித்து அகில இந்திய அளவிலான திருநங்கைகளுக்கான கல்வி சேவை அமைப்பின் தலைவர் கிருஷ்ணா மோகன் மிஸ்ரா கூறுகையில், ஜனவரி 15-ந்தேதி, 2 குழந்தைகளுடன் முதலாம் வகுப்பு தொடங்கும் என்றும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதர வகுப்புகள் தொடங்கும் என்றும் கூறினார். சமூகத்தில் மரியாதை பெற்று தரும் சக்தி கல்விக்கு உண்டு என்றும், திருநங்கைகளுக்கு கல்வி அளிக்கப்படுவதன் மூலம் சமூகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பாக அமையும் என்றும், திருநங்கைகளுக்கான அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
Discussion about this post