ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரியை துணிச்சலுடன் நிறுத்தி, பெரும் விபத்தை தவிர்த்த ரயில்வே காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் மேம்பாலத்தில் பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சக்திவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், லாரி கட்டுப்பாட்டை இழந்து பின் பக்கமாக பாலத்தில் வேகமாக சென்றுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ரயில்வே காவலர் சண்முகம், துரிதமாக செயல்பட்டு லாரியில் ஏறி பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து ஓட்டுநர் சக்திவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓட்டுநர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து மீண்டும் லாரியை இயக்கி சென்றார். பெரும் விபத்தை தடுத்த ரயில்வே காவலருக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரயில்வே காவலர் சண்முகம் சில தினங்களுக்கு முன்பு சென்னை ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் நிலைதடுமாறி விழுந்த போது, அவரை உடனடியாக காப்பாறியதற்காக முதலமைச்சரிடம் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post