2021 ஆம் ஆண்டிற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பானது, கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக எடுக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 2021 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. தற்போது எடுக்கப்பட உள்ள கணக்கெடுப்பானது, 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இதற்காக, 8 ஆயிரத்து 754 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல், தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை திருத்தம் செய்ய 3ஆயிரத்து 941கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரயில்வே வாரியத்தை மறுசீரமைப்பு செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். மறுசீரமைப்பு செய்யப்படும் ரயில்வே வாரியத்தில் ஒரு தலைவர், 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
Discussion about this post