உள்ளாட்சித் தேர்தலையொட்டி பல்வேறு இடங்களில் அமைச்சர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்ற அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து , அரியலூர் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பிரசாரம் மேற்கொண்டார். சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட தாமரை ராஜேந்திரன், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக வேட்பாளர்கள் செல்லும் இடங்களில், பொதுமக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பிரசாரம் மேற்கொண்டார். கள்ளிக்குடி கிராமத்திலிருந்து பாண்டி, எடையூர், பின்னத்தூர், உதயமார்த்தாண்டபுரம் ஆகிய பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி அமைச்சர் காமராஜ் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
Discussion about this post