வளர்ச்சித் திட்டங்கள் தொடர, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கேட்டுக்கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்திற்குட்பட்ட ஈச்சங்குடி ஊராட்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து, அமைச்சர் துரைக்கண்ணு வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதிமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குச் சேகரித்த அமைச்சர் மற்றும் வேட்பாளர்களுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post