விண்வெளிக்கு அனுப்புவதற்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசுப் பள்ளி மாணவர்கள் வித்தியாசமான இரண்டு பொருட்களை பரிந்துரைத்துள்ளனர்
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாளையொட்டி செயற்கைகோள் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்ல வித்தியாசமான பொருட்களை பரிந்துரைப்பதற்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிதம்பரம் ஆறுமுக நாவலர் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பென்சிலின் சிமெண்ட் உள்ளிட்ட 9 வகை பொருட்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் பென்சிலுனும் சிமெண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post