தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மேம்படுத்த தொழில் அதிபர்கள் உதவ வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரியான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின்
75ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, சர்வதேச விளம்பரதாரர் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீனிவாசன் கே.சுவாமி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய ஆளுநர், தனிப்பட்ட வாழ்விலும் வெளிப்படைத்தன்மையுடன் வாழ்ந்தால் மட்டுமே சிறப்பான வாழ்வை வாழ முடியும் என்று கூறினார். மேலும், ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க இன்றைய மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post