நாட்டிலேயே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் தான் குறைவாக நடப்பதாக, காவலன் செயலி அறிமுக நிகழ்ச்சியில், சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்தார்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், காவலன் செயலியை மாணவிகள் மத்தியில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரன் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட இணை ஆணையர் விஜயகுமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, காவலன் செயலியை பயன்படுத்தும் முறை மற்றும் பயன்கள் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய காவல் கூடுதல் ஆணையர் தினகரன், இந்தியாவிலேயே சென்னையில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடப்பதாக தெரிவித்தார்.
Discussion about this post