லலிதா ஜூவல்லரி கொள்ளையில் ஈடுபட்ட கணேசன் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக, முருகன், சுரேஷ், மணிகண்டன் மற்றும் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், கணேசன் மீது திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் ஒரு கொள்ளை வழக்கும், மதுரை வாடிப்பட்டி காவல் நிலைத்தில் ஒரு கொள்ளை வழக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலும் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
எனவே, கணேசனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கக் கோரி, திருச்சி கோட்டை காவல்துறையினர் அளித்த பரிந்துரையின் பேரில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூ, கொள்ளையன் கணேசனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்.
Discussion about this post