ஹார்வார்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் வெளி மாநிலங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகளை அமைக்கத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்தி, ‘தமிழ் வளர்க்கப்படும்’ என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கத் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்க 7 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post