காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,643 கனஅடியாக உள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை அளவு குறைந்தது. இதேபோல், கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 643 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93. 47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Discussion about this post