விராலிமலையில் இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவரே மனைவியை கொலை செய்தது வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமா நகர்ப் பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனர். பெண்ணின் காலில் மெட்டி அணிந்திருந்ததால், திருமணமானவர் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. அவர், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா?, இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் பாண்டிய நகர்ப் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது மனைவி பானுரேகாவை விராலிமலை அருகே கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகக் கூறி பாண்டிய நகர் போலீஸில் சரணடைந்துள்ளார். போலீஸார் விசாரணையில்,“இருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி உள்ளது. ஒருவருடமாகியும் குழந்தை இல்லை. இல்லற வாழ்வில் திருப்தியில்லை என்று கூறி ராம்குமார் பானுரேகாவிடம் தினமும் சண்டை
இருவருக்குமிடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது. இந்த நிலையில்தான், உறவினர்கள் சிலர் கோயில்களுக்குச் சென்று வந்தால், எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லியதை அடுத்து, திருச்சி மலைக்கோட்டை, சமயபுரம் கோயில்களுக்குச் செல்வதற்காக ராம்குமார், பானுரேகாவை டூவீலரில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போதும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் பானுரேகாவின் துப்பட்டாவைக் கழுத்தில் நெரித்துக் கொலை செய்துவிட்டு, தடையங்களை மறைக்க வேண்டும் என்று டூவீலரில் இருந்த பெட்ரோலை பானுரேகாவின் உடலில் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். போலீஸ் விசாரணையில் ராம்குமார் இதைத் தெரிவித்துள்ளார். மேலும், அவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post