திருச்செங்கோடு ஒன்றியத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பிரசாரம் மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளில் போட்டியிடும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பொய் வாக்குறுதிகளை அளித்து, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர், மக்களை சந்திப்பதே இல்லை என்று குற்றம்சாட்டினார். அப்படி ஏமாற்றும் திமுகவினரை மக்கள் இனியும் ஆதரிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் தங்கமணி பிரசாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வெற்றியை முதலமைச்சரிடம் சேர்ப்போம் என்று கூறினார். இந்த பிரசாரத்தில், ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post