தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகம் மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் சூறைக் காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post