மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு முன்னிலையில் அமமுக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
மதுரை செல்லூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அமமுகவில் இருந்து விலகிய ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தலைமைச் செயலகத்தில் ஒரு கோப்பு கூட நிலுவையில் இல்லை எனவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும், மருது சகோதரர்கள் போலச் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், தொண்டர்கள் அனைவரும் அதிமுகவின் வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
Discussion about this post