அங்கீகாரம் இல்லாமல் எம்-சாண்ட் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எம்-சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் மத்திய, மாநில துறைகளைச் சேர்ந்த தொழிநுட்ப குழுவால் தரச்சான்று வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 216 எம்-சாண்ட் நிறுவனங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், இந்த நிறுவனங்களின் தகவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டும் எம்-சாண்ட் வாங்கி பயன்படுத்துமாறும் பொதுப்பணித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. எம்-சாண்ட் தயாரிக்க நிறுவனம் தொடங்கினால், 30 நாட்களுக்குள் அனுமதி பெற வேண்டும் என்றும், அங்கீகாரம் இல்லாமல் எம்-சாண்ட் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Discussion about this post