விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்கப் புதிதாக தனி போக்சோ நீதிமன்றம் திறக்கப்பட்டது.
சிறுமிகள் மற்றும் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யும் சட்டம் 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி போக்சோ நீதிமன்றம் திறக்கப்படுகிறது. அந்த வகையில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட போக்சோ நீதிமன்றக் கட்டடத்தைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post