அரியமங்கலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில், சங்கர் என்ற இளைஞர், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர், அரியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் தப்பியோடிய சங்கரை பிடித்த காவல்துறையினர், பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, சங்கர் மீது போக்சோ சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Discussion about this post