காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 22- வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 22ஆவது கூட்டம் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்டக் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக, கேரள, கர்நாடக, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் அணைகளின் நீர் இருப்பு, நீர் திறப்பு, மழைப்பொழிவு தொடர்பான தங்களது புள்ளி விவரங்களை அளித்தனர்.
Discussion about this post