தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவையின் ஒரு கூட்டத்தொடருக்கும், மற்றொரு கூட்டத் தொடருக்குமான கால இடைவெளி 6 மாதங்களை தாண்டி இருக்கக் கூடாது என்பது சட்டப்பேரவை விதி. எனவே ஜனவரி மாதம் 19ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும். ஜனவரி 13ஆம் தேதியில் இருந்து பொங்கல் பண்டிகை விடுமுறை வருவதால், சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஜனவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும்.
Discussion about this post