மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பீடு, நிலுவை தொகையான ரூ.35 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள இழப்பை மத்திய அரசு வழங்க வேண்டும். இது நீண்டகாலமாக வழங்கப்படாததால் பல்வேறு மாநில அரசுகளின் பிரதிநிதிகள், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பிரதிநிதிகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்கள். அப்போது, மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை வழங்காததால் பல வளர்ச்சிப்பணிகள் தாமதமாவதாகவும், எனவே விரைவில் இந்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவை தொகை ரூ.35 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் டுவிட்டரில், “மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.35,298 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது” என தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை ‘ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்’ நடைபெற உள்ளது.
Discussion about this post