பிரபல மொபைல் நிறுவனமான சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தைகளில் வெளியாகும் புது வரவுகளால் அனைத்து நிறுவனமும் தொடர்ந்து சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தள்ளுபடி விலையில் மொபைல்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது. தற்காலிகமாக வழங்கப்படும் இந்த தள்ளுபடி டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
இதில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3000 மற்றும் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ. 2000 உடனடி கேஷ்பேக் ஆஃபர்கள் உடனடியாக வழங்கப்படுகிறது.
Discussion about this post