நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்கோரி துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற பெண் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு இதுவரை தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4பேரும் கடந்த 6-ந்தேதி என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்
இதனால் நிர்பயா குற்றவாளிகளுக்கும் விரைந்து தண்டனையை நிறைவேற்றிட நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் தூக்கிலிடும் பணியை செய்ய ஆட்கள் யாரும் இல்லாததால் தள்ளிக்கொண்டே செல்வதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் காவல்துறை அதிகாரி உட்பட பலரும் தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள அனுமதிக்க கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள அனுமதி கோரி இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் அனுப்பி உள்ளார்.
Discussion about this post