வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் நதியாறில் 9 சென்டி மீட்டர் மழையும், திருச்செந்தூர், கொடுமுடி உள்ளிட்ட இடங்களில் தலா 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post