தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் நீதிமன்றங்களில் 65 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில், நேற்று தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டு 17 வகையான வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் அடங்கிய 516 அமர்வுகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டன. இந்த அமர்வுகளில் நிலுவையில் இருந்த சுமார் 3 லட்சம் வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அதில் 65 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 395 கோடியே 78 லட்சத்து 2 ஆயிரத்து 233 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post