கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மூன்று எண் கொண்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மூவரை, காவல் துறையினர் கைது செய்தனர்.
லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில், மூன்று எண் கொண்ட லாட்டரி விற்பனையில் மூவர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அருண், விக்னேஷ் பாண்டியன் மற்றும் சுரேஷ் ஆகிய மூவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், லாட்டரி விற்பனையில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post