சேலத்தில், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரத்தில், லாட்டரி விவகாரத்தால்,ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகம் முழுவதிலும் லாட்டரி விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சேலத்தை அடுத்த சோளம்பள்ளம் பகுதியில், 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்திரா அவரது மகன் பாரதி, மருமகள் பிரியா மற்றும் சந்திராவின் தங்கை சங்கீதா ஆகியோரை சூரமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வீட்டிலேயே, லாட்டரி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதேபோன்று மாநகரின் பல்வேறு பகுதிகளில், லாட்டரி விற்பனை செய்து வருபவர்கள் குறித்து காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post