தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி வரும் 16ஆம் தேதியில் இருந்து, 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியானவர்கள் அனைவருக்கும், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்படும். இந்த ஆண்டு, வாக்காளர்களே அவர்களது விவரங்களைத் திருத்த வாய்ப்பு அளிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் வரும் 16ம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 23ம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அந்தப் பட்டியலில் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தாலோ ஜனவரி 22ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். திருத்தங்களுக்கு பெறப்பட்ட மனுக்களின் மீது பிப்ரவரி 3ம் தேதிக்குள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ள சத்யபிரதா சாகு, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post