நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற வரிகளை காற்றில் பறக்கவிட்டு, நான் ஒருவன் எனக்கு மட்டுமே 39 பேர் என்ற உயரிய கொள்கையோடு வாழ்ந்து வரும் 40ஸ் கிட்ஸ் ஒருவரை பற்றிய ஒரு சுவரஸ்ய தொகுப்பு
90ஸ் கிட்ஸ் என்றாலே முதலில் நமக்கு நாபகம் வரது கல்யாண மீம் தான் , எங்க பார்த்தாலும், எனக்கு எப்போ கல்யாணம் ஆகும் ! எனக்குலாம் கல்யாணம் ஆகுமா! என்ற வார்த்தைதான் அதிகமா நாம பார்க்குறோம், இது ஒரு புறம் இருக்க கல்யாணம் பன்னிகிட்ட பாதி பேர் அவங்க மனைவியோட தொல்லை தாங்க முடியாம , நான் பொறன் சன்னியாசி என பாட்டு பாடி கொண்டிருப்பதையும் நாம கண்டிப்பா பார்த்திருப்போம்.
அப்படி மனைவி தொல்லை பன்னும்போது அவங்க மனதுல ஓடுறதுலாம் ஒன்னு தான், இந்த ஒன்ன வச்சிகிட்டே என்னால சமாளிக்க முடிலையே, எப்டிதான் சில பேர் இரண்டு, மூனு திருமணம் பன்றாங்களோ என்ற வரிகள்தாங்க.
அப்படி இருக்கையில 40ஸ் கிட்ஸ்-ஆன ஒருவருக்கு 39 மனவிகளாம், இதை கேட்கும் போதே தலையை சுத்துது இல்லையா, அட ஆமாங்க தற்போது 76 வயதாகும் ஜியோனா சானா என்ற முதியவர்தான் இந்த கதையோட ஹீரோ.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்தவர்தான் ஜியோனா சானா, இவருக்கு 39 மனைவிகள் 94 குழந்தைகள் மற்றும் 14 மருமகள், 33 பேரக் குழந்தைகள் என பெரிய குடும்பமா வாழ்ந்து வராரு.
குடும்பத்தினர் வசிப்பதற்காகவே அவரோட சொந்த கிராமத்துல மிகப்பெரிய 100 அறைகள் கொண்ட மாளிகை கட்டிருக்காரு. இதுல கூடுதல் சிறப்பு என்னனு பார்த்தோம்னா, இளம் வயது மனைவிகள் தங்குவதற்க்கு அவருடையே அறை அருகே பிரத்தியோகமான அறையும் , வயதான மனைவிகளுக்கு மாளிகையின் ஒதுக்கு புறத்தில் உள்ள அறையையும் ஏற்படுத்தி கொடுத்துருக்கிறாரு.
ஜியோனா குடும்பத்தின் உணவுக்காக ஒரு நாளைக்கு 100 கிலோ அரிசி, 60 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் 40 கிலோ சிக்கன் அவசியமாக இருக்கிறது, இதை தாண்டி கீரை , காய்கள் என தினமும் விழா கோலமாகவே தனது குடும்பத்தினை வைத்திருக்காரு ஜியோனா சானா மேலும் வீட்டில் சமைப்பதற்க்கு கும்பதினரே உதவுவது கூடுதல் சிறப்பாக இருக்கு.
இது குறித்து ஜியோனா சானா கூறுகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, அதனால்தான் கடவுள் எனக்கு இவ்வளவு பெரிய குடும்பத்தை கொடுத்திருக்கிறார் , நான் கடவுளின் குழந்தை எனது கும்பத்தை இன்னும் வளர செய்ய புதிதாக ஒரு திருமணம் செய்ய போகிறேன் என பெருமையாக தெரிவித்திருக்காருங்க.
உலகிலயே மிகப்பெரிய குடும்பமாக இவரது குடும்பம் அங்கிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விலைவாசியால் ஒரு மனைவியை வைத்தே குடும்பம் நடத்த கஷ்டப்படும் இன்றைய காலத்தில் இவர கண்டிப்பா பராட்டி ஆகனும்தாங்க சொல்லனும்.
Discussion about this post