அமெரிக்காவில் உள்ள வயோமிங்கிங் என்கிற மாகாணத்தில் பனி உறைந்த குளத்தில் தவறி விழுந்த மான் பத்திரமாக மீட்டகப்பட்டது
வயோமிங்கிங்கில் கடும் பனிப்பொழிவு தற்போது நிலவி வருவதால் சப்லேட்டே என்கிற நகரில் உள்ள குளத்தில் நீர் உறைந்து போய் இருந்தது. இந்த நிலையில், அதில் சறுக்கி விழுந்த மான் ஒன்று எழுந்து நிற்க முடியாமல் போராடியது தெரியவந்தது.
இதனை பார்த்த காவலர்கள் மானை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். பின்னர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மற்றும் கடும் பனியால் உடல்கள் விரைத்து நடக்க முடியாமல் கிடந்த மானை அங்கிருந்து தூக்கி வந்த மீட்புப்பணியினர், சூடான தரை தளத்தில் வைத்தனர். பின்பு குளிரின் தாக்கத்தில் இருந்து விடுபட்ட மான் அங்கிருந்து சென்றதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post