சாக்லேட் என்று சொன்னாலே நம் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சிலர் சாக்லேட் பிரியர்களாக இருப்பார்கள். எவ்வளவுதான் பிடித்ததாக இருந்தாலும் அதிகபட்சமாக சாக்லேடிற்காக நாம் 100 ரூபாய் தான் செலவு செய்வோம்.ஆனால் உலகின் விலையுயர்ந்த fabelle சாக்லேட்டை ரூ. 1 லட்சத்திற்கு ஐடிசி தயாரித்துள்ளது.
இந்த சாக்லேட் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. 15 சாக்லேட்டுகள் கொண்ட இந்த பெட்டியில் மூன்று flavor -கள் உள்ளது.Creator, nurturer ,destroyer என்று கூறுகின்றனர்.
Creator சாக்லேட்டில் மூன்று கோக்கனட் லேயர் இருக்கும்.வெண்ணிலா பீன்,ரோஸ்ட் கோகோனட் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
Nurturer சாக்லேட் ஆனது gana dark chocolate,Jamaican blue mountain coffee ஆகியவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த காப்பி பீன்ஸ்கள் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது என்று கூறலாம்.
கடைசியாக destroyer சாக்லேட். இந்த சாக்லேட்டின் 3 லேயர் உள்ளது. இதில் A grand Cru dark chocolate ganache, Piedmont hazelnut, almond praline,black pepper
ஆகியவை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.
மேலும், வாடிக்கையாளரின் ஆர்டர் வருவதன் மூலமே இந்த சாக்லேட் புதிதாக தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post