ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய பயனாளர்களுக்கு Wi-Fi calling வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் நடைமுறைப்படுத்திய உயர்த்தப்பட்ட மொபைல் கட்டணங்கள் மற்றும் சில மாற்றங்களால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்களை கவர பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதன்படி ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் இலவச அன்லிமிடெட் கால் வசதியையும், ஜியோ பழைய கட்டண முறையையும் கொண்டு வந்தன.
இந்நிலையில் “வோ வைபை” என்ற பெயரில் ஏர்டெல் நிறுவனம் Wi-Fi calling வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி முதல் கட்டமாக டெல்லியில் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிக்னல் இல்லாத இடத்திலும் Wi-Fi மூலம் அதிவேகமான அழைப்புகளை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் நெட்வொர்க்கில் இணைந்து இருந்தால் மட்டுமே பெற முடியும். விரைவில் இந்த வசதி இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் VoIP என்ற தொழில்நுட்பம் செயல்படுகிறது.
மேலும் ஏர்டெல்லின் Wi-Fi calling வசதியை, ஐபோன்களில் XR, 6S,6S+ , 7, 7+, S.E, 8, 8 + , X, X.S, X.S.Max, 11, 11 Pro விலும் , one plus மொபைல்களில் 7, 7 Pro,7டி, 7டி Pro ஆகியவற்றிலும் , போகோ F1, ரெட்மி K20, ரெட்மி K20 Pro, சாம்சங் கேலக்ஸி J6, சாம்சங் கேலக்ஸி ஆன் 6 ஆகிய மொபைல்களில் தற்சமயம் பெறலாம்.
ஏற்கனவே இதற்கு முன் ஜியோ நிறுவனம் Hotspot ரௌட்டர் மூலம் Wi-Fi calling வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post