தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி வழங்குவது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி கழகத்தின் அதிகாரிகள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர்…
வரும் 2023-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்ற தொலைநோக்கு திட்டத்தின் படி தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு நிறுவனமான ஹட்கோ இயக்குனர் நாகராஜ் செயல் இயக்குனர் குகன், உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். மேலும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் நிதித்துறை கூடுதல் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் வீட்டு வசதி வாரிய திட்டங்கள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும், இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.
Discussion about this post