கர்நாடகத்தில் இருந்து காவிரியாற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 5ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து 5ஆயிரம் கன அடியாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை படிப்படியாகக் குறைந்துவிட்டது. இதனால் கர்நாடகத்தில் இருந்து தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 5ஆயிரம் கன அடியாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஒகேனக்கல் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த மூன்று நாட்களாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி யாகவும் உள்ளது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post