மும்பை, கொல்கத்தா, ராய்ப்பூர் நகரங்களில் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 42 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் தங்கக் கட்டிகளைக் கடத்திக் கொண்டு வருகின்றனர். இதனால் அரசுக்கு இறக்குமதி வரி இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளிடம் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
டிசம்பர் 8 -ம் தேதி மட்டும் மும்பை, கொல்கத்தா, ராய்ப்பூர் விமான நிலையங்களில் இவ்வாறு நடத்திய சோதனையில் 42 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 10 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் சந்தை மதிப்பு 16 கோடியே 50 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது.
Discussion about this post