தேசபக்தி, சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றின் அடையாளமாக மகாகவி பாரதியார் திகழ்ந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி பாரதியின் 138ஆவது பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவரை நினைவுகூர்ந்துள்ளார். அதில் தேசபக்தி, சமூகச் சீர்திருத்தம், புலமை, சுதந்திரம், அச்சமின்மை ஆகியவற்றின் அடையாளமாகப் பாரதியார் திகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பாரதியாரின் சிந்தனைகளும் படைப்புகளும் நம் அனைவரையும் நல்வழிப் படுத்துவனவாக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post