எகிப்து வெங்காயத்தின் வருகையால் தமிழக சந்தைகளில் வெங்காயத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது…
வெங்காய உற்பத்தி மாநிலங்களில் பெய்த தொடர் மழையால் வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய விலை அதிகரித்ததை தொடர்ந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் முதல் கட்டமாக 40 டன் வெங்காயம் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து வெங்காயத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில், பெரிய வெங்காயம் 80 ரூபாயில் இருந்து 120 வரையிலும், சிறியரக வெங்காயம் 40 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post