ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட இரண்டே நாட்களில் 5001 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. வேட்பு மனு வழங்கப்பட்ட இரண்டாம் நாளில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,458 மனுக்களும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 288 மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 38 மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 மனுக்கள் என மொத்தம் 1,784 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய திங்கட்கிழமையன்று 3 , 217 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டே நாட்களில் மொத்தம் 5001 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post