நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 172 தங்கம் உட்பட மொத்தம் 310 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, பூடான் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். 10 நாட்களாக நடைபெற்ற போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
இதில், 172 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என மொத்தம் 310 பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. நேபாளம் 51 தங்கம், 59 வெள்ளி, 94 வெண்கலம் என மொத்தம் 204 பதக்கங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. இலங்கை 40 தங்கம், 82 வெள்ளி, 128 வெள்ளி என மொத்தம் 250 பதக்கங்களுடன் மூன்றாமிடம் பிடித்தது. பாகிஸ்தான் 31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 131 பதக்கங்களுடன் நான்காமிடம் பிடித்தது.
Discussion about this post